ஆற்றில் மூழ்கி கணவன்-மனைவி உள்பட மூவர் பலி; 3 பேரை காணவில்லை

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 12:09 pm
2-students-were-found-dead-in-river-namakkal-district

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே குளிக்கச் சென்ற போது ஆற்றில் மூழ்கி 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், காணாமல் போன மூன்றுபேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில், சிறுவர்கள் விடுமுறை நாட்களில் குளிக்கச் செல்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறையையொட்டி, சிறுவர்கள், தங்களின் பெற்றோர்களுடன் இன்று குளிக்கச் சென்றனர்.

தொடர்ந்து, குளிக்கச் சென்றவர்கள் கரைக்கு திரும்பவேயில்லை என்பதை அறிந்த அங்குள்ளவர்கள், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலில் 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி, உறவினர் ஒருவர் என மூவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களது மகன்கள் இருவர் உள்பட மூவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஆற்றில் பள்ளமான பகுதி என்று தெரியாமல், அங்கு சென்று நீர்ச் சூழலில் சிக்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close