வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 01:00 pm
madras-high-court-dismissed-vedanta-s-plea

ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க, தனிக்குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில், நிர்வாகப் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெறும் பணிகளை கவனிக்க தனியாக ஒரு பராமரிப்பு குழுவை நியமிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவின் மீதான விசாரணையில்,  ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பதற்கு ஏற்கனவே கண்காணிப்பு குழுக்கள் இருப்பதாகவும், அந்தக்குழு தொடர்ந்து ஆலையின் பணிகளை கவனித்து வருவதாகவும் தமிழக அரசு கூறியது.

இதையடுத்து, தமிழக அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close