சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 02:24 pm
will-take-action-against-sivakarthikeyan-sathya-pratha-sahoo

வாக்காளர்  பட்டியலில் பெயர் இல்லாமலே வாக்களித்த சிவகார்த்திகேயன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். 

கடந்த ஏப்ரல் 18ம் தேதி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் சிவகார்த்திகேயன் வாக்களிக்க சென்ற போது, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அதிகாரிகள் முதலில் கூறியுள்ளனர். அவரும் அதிர்ச்சியாகவே, பிறகு பட்டியலை சரிபார்த்து அவரது பெயர் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.

ஆனால், சிவகார்த்திகேயன் பெயர் பட்டியலில் இல்லாமலே அவர் வாக்களித்ததாக புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. 

பின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, "வாக்காளர்  பட்டியலில் பெயர் இல்லாமலே வாக்களித்த சிவகார்த்திகேயன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close