அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்புமனுத் தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 11:52 am
senthil-balaji-files-his-nomination-in-aravakurichi

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்.18ம் தேதி நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து, தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வருகிற மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மக்களவைத் தேர்தலுக்கு அடுத்த நாளே பிரசாரத்தைத் தொடங்கினார். அரவக்குறிச்சி தொகுதி மக்களிடம் அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி மற்றும் கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். 

மேற்குறிப்பிட்ட இந்த 4 தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி கடைசி நாளாகும். மக்களவைத் தேர்தலோடு, மே 23 அன்று தமிழகத்தின் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close