'நிழல் இல்லா நாள்' - சீக்கிரம் போயி பாருங்க மக்களே!

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 12:26 pm
zero-shadow-day-in-chennai

தமிழகத்தில் 'நிழல் இல்லா நாள்' அபூர்வ நிகழ்வு நடைபெறுவதையொட்டி, மாணவ, மாணவிகள் கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் குவிந்துள்ளனர். 

சூரியன் நமது தலைக்கு மேலே நேராக இருக்கும்போது, பின்தொடரும் நிழலின் நீளமானது பூஜ்யமாகி விடுகிறது. இது 'நிழல் இல்லா நாள்' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்படும். இந்தாண்டு தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதியும், ஆகஸ்ட் 18ம் தேதியும் நிகழ்கிறது. 

அதாவது, இந்நாளில் நிழலை நாம் பார்க்க முடியாது. நிழலானது நமது காலுக்கு கீழே அடங்கிவிடும். பூமி, சூரியனை சுற்றும் போது, பூமிக்கு செங்குத்தாக சூரியன் இருக்கும் போது, இது நிகழும். ஆனால், பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஒரே நாளில் நிகழாது. நேற்று புதுவையை ஒட்டிய பகுதிகளில் நிகழ்ந்தது. தமிழகத்தில் இன்று காலை 10 மணி முதல் காணலாம். குறிப்பாக 12.05 முதல் 12.30 மணி வரை தெளிவாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து சில நிமிடங்கள் கழித்து பெங்களுருவில் காணலாம். 

நிழல் இல்லாத நிகழ்வை காண மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் குவிந்துள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close