சிவகார்த்திகேயன் விவகாரத்தில் தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 01:07 pm
sivakarthikeyan-issue-tn-chief-election-officer-replied

வாக்காளர்  பட்டியலில் பெயர் இல்லாமலே சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று தெரிவித்துள்ளார்.  

கடந்த ஏப்ரல் 18ம் தேதி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் சிவகார்த்திகேயன் வாக்களிக்கச் சென்ற போது, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரும் அதிர்ச்சியாகவே, பிறகு பட்டியலை சரிபார்த்து அவரது பெயர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சிவகார்த்திகேயன் வாக்களித்ததாக செய்தி வந்தது. 

ஆனால், சிவகார்த்திகேயன் பெயர் பட்டியலில் இல்லாமலே அவர் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியிருந்தார். 

தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்காளர்  பட்டியலில் பெயர் இல்லாமலே சிவகார்த்திகேயன் வாக்களித்தது அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அலுவலர் மீது  தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார். 

மேலும், "சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாது. அவர் விதிகளை மீறி வாக்களித்திருந்தாலும் அவரது வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" என்றும் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close