ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 24 Apr, 2019 05:24 pm
the-possibility-of-a-storm-in-the-bay-of-bengal-on-april-27-and-28

ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், ’தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது வரும் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வரும் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக கூடுதல் வலுபெற்று தற்போதைய நிலவரப்படி தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், மீனவர்கள் வரும் ஏப்ரல் 26-ம் தேதி முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம்’ என எச்சரித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கோடை மழை காரணமாக மழை பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 5 செ.மீ மழையும், வால்பாறையில் 4 செ.மீ மழையும் பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close