நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் குளறுபடி: என்ன செய்வது? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 11:40 am
neet-exam-hall-ticket-issue-update

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏதேனும் குளறுபடி இருந்தால், மாணவர்கள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு விளக்கம் பெற பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வு இந்தியா முழுவதும் வருகிற மே 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் வெளியிடப்பட்டது.  அதில், தேர்வு மையத்தின் விவரங்கள் சரியாக இடம்பெறவில்லை என்றும் ஒரு சில ஹால் டிக்கெட்டில் தேர்வு மையத்தின் பெயரும், ஊரின் பெயரும் ஒத்துப் போகவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, மாணவர்களின் தகவல்களில் ஏதேனும் குளறுபடி இருந்தால், அந்த பள்ளித் தலைமை ஆசிரியரின் உதவியுடன் திருத்தம் மேற்கொண்டு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், மாணவர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டில் ஏதேனும் குளறுபடி இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close