அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 12:01 pm
imd-heavy-to-very-heavy-rainfall-expected-at-isolated-places-over-tamil-nadu-and-puducherry-in-next-48-hours

வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழ்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக மாற வாய்ப்புள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது. மேலும், மீனவர்கள் இன்று முதலே மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய வானிலை மையமும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழ்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்றும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close