விதிகளை மீறி வாக்களித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த்! - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2019 01:48 pm
sathya-pratha-sahoo-explains-about-srikanth

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலே, விதிகளை மீறி ஸ்ரீகாந்த் வாக்களித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலே நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் தான் வாக்களித்துள்ளார் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உறுதி செய்தார். மேலும், அவரை வாக்களிக்க அனுமதியளித்த தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரமும் அதேபோன்று தான நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலே அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். 

மேலும், சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close