மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  அனிதா   | Last Modified : 25 Apr, 2019 03:40 pm
fishermen-do-not-go-to-sea-balachandran

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அதன்  காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காலை உருவாகிய குறைந்த காற்றழுத்தம் வலுவாகி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும், வரும் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுபெற்று தற்போதைய நிலவரப்படி வட தமிழக கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் எனவும் அவர் கூறினார். இதன் காரணமாக மீனவர்கள் இன்று மற்றும் நாளை தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close