தமிழகத்தில் புயல், பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

  டேவிட்   | Last Modified : 26 Apr, 2019 08:03 am
met-announcement-regarding-rain-and-storm

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதி  பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு தற்போது வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, இது மேலும் வலுவடைந்து, புயலாக மாறி, வடதமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் எனவும்ட, இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 இரு தினங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வியாழக்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது எனவும், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்  மேலும் வலுவடைந்து, நாளை (சனிக்கிழமை) புயலாக மாறி , தென் மேற்கு வங்கக்கடல் மற்றும், அதனையொட்டிய இந்திய கடலில் மையம் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக கடலோரத்தில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதியும், மே 1ஆம் தேதியும்  மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஏப்ரல் 30, மே 1 ஆகிய இரு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் மிக பலத்த  முதல் மிகமிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close