காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை

  முத்துமாரி   | Last Modified : 26 Apr, 2019 12:30 pm
tn-govt-meeting-reg-red-alert-for-tamilnadu

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவான நிலையில், சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது.

புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தீயணைப்புத் துறை இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

கிழக்கு இந்திய பெருங்கடல் - வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து, புயலாக மாறி, வடதமிழக கடற்கரை நோக்கி நகரும்.

இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close