எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் தேர்தலை சந்திப்போம்: வெற்றிவேல் பேட்டி

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2019 12:56 pm
vetrivel-press-meet

அதிமுகவில் 3 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், சட்டப்படி தேர்தலை சந்திப்போம் என அமமுகவின் வெற்றிவேல் தெரிவித்த்துள்ளார். 

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி மற்றும் நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகிய 4 பேரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் நேற்று புகார் அளித்தார். 

இந்த நிலையில் இது தொடர்பாக, சென்னை அடையாறில் டிடிவி தினகரனை சந்தித்ததார் வெற்றிவேல். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஅவர், "அதிமுகவில் 3 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர்கள் சட்டப்படி தேர்தலை சந்திப்பார்கள். யாரை பார்த்தும் எங்களுக்கு பயமில்லை. எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பாதுகாப்பு இருக்கிறது.

அதிமுகவில் இன்னும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர். "என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close