"பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர்" - வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு கனிமொழி இரங்கல்!

  முத்துமாரி   | Last Modified : 28 Apr, 2019 09:01 am
kanimozhi-condolences-to-vasanthi-stanley

திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு திமுக எம்.பி கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சென்னையில் வசித்து வரும் வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .

வசந்தி ஸ்டான்லி திமுகவில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் இவர் ஒரு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  

வசந்தி ஸ்டான்லியின் மறைவு குறித்து திமுக எம்.பியும், திமுக மகளிர் அணித் தலைவருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "வசந்தி ஸ்டான்லியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர். நல்ல பேச்சாளர். எதையும் எதிர்த்து போராடக்கூடியவர். தோழி, அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close