திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு திமுக எம்.பி கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் வசித்து வரும் வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .
வசந்தி ஸ்டான்லி திமுகவில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் இவர் ஒரு பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
வசந்தி ஸ்டான்லியின் மறைவு குறித்து திமுக எம்.பியும், திமுக மகளிர் அணித் தலைவருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "வசந்தி ஸ்டான்லியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர். நல்ல பேச்சாளர். எதையும் எதிர்த்து போராடக்கூடியவர். தோழி, அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு" என்று தெரிவித்துள்ளார்.
வசந்தி ஸ்டான்லியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர். நல்ல பேச்சாளர். எதையும் எதிர்த்து போராடக்கூடியவர். தோழி. அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 28, 2019
newstm.in