1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் : பள்ளிக்கல்வித் துறை அதிரடி

  முத்து   | Last Modified : 28 Apr, 2019 05:30 pm
salary-stop-for-1-500-teachers

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேருக்கு சம்பளம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது, 2010-ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

இதற்கான அவகாசம் 2015 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், 2019 மார்ச் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மார்ச் 2019 வரை அவகாசத்தை நீட்டித்தும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவர்களின் சம்பளத்தை நிறுத்தம் செய்து, தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close