பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

  அனிதா   | Last Modified : 29 Apr, 2019 09:30 am
10th-exam-result-released

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியானது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 14-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதியுள்ளனர்.   இந்த தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியானது. பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் மே 2 முதல் மே 4 வரை மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் . தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close