அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு !

  அனிதா   | Last Modified : 29 Apr, 2019 01:21 pm
a-few-places-in-the-north-tamil-nadu-may-have-a-rainfall

நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஃபனி புயல் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தற்பொழுது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 870 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும். 

இந்த புயல் மே 1 ஆம் தேதி வரை வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கரைகளுக்கு அருகில் 300 கி.மீ தொலைவு வரை வந்து பிறகு வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். மழையை பொறுத்தவரை ஏப்ரல் 30 ஆம் தேதியும் மே 1 ஆம் தேதியும் வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதனான மழை பெய்யக்கூடும்.

வட தமிழக கடற்கரை பகுதிகளில் நாளை காலை மணிக்கு 40 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நாளை மாலை  50 கி.மீ முதல் 70 கி.மீ வரை வீசக்கூடும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே ஏப்ரல் 29,30 மற்றும் மே 1, 2 ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடற்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம், ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுருத்தப்படுகிறார்கள்" என தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close