மெட்ரோ ஊழியர்கள் போராட்டம்: ஸ்டாலின் கவலை

  முத்து   | Last Modified : 30 Apr, 2019 06:59 pm
metro-staff-struggle-stalin-worry

சென்னையில் மெட்ரோ ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல், இன்றைக்கு அவர்களை போராட்டக்களத்துக்கு தள்ளியிருப்பது கவலையளிக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வுகாண வலியுறுத்துகின்றேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மெட்ரோ ரயில் பணியாளர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும், மீண்டும் நாளை மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சிஐடியூ சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close