எம்.இ., எம்.டெக்.,  படிப்புகளில் சேர இனி ஒரே நுழைவுத்தேர்வு! - உயர்கல்வித்துறை அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 07:53 am
higher-education-department-announcement-for-m-e-m-tech-course

எம்.இ., எம்.டெக்., படிப்புகளில் சேர இனி ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதனை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் உயர்கல்வித்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பி.இ. படிப்புகளை முடித்தவர்கள் முதுநிலை படிப்புகளான எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளில் சேர TANCET , AUCET என்ற இரண்டு வகையான நுழைவுத்தேர்வுகளை எழுதவேண்டியிருந்தது. இந்த இரண்டு தேர்வுகள் இருப்பதால் மாணவர்களிடையே ஒரு குழப்பமும் நீடித்து வந்தது.

இதையடுத்து முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர வேண்டுமென்றால், ஒரே ஒரு பொது தேர்வு எழுதினால் போதுமானது என்று உயர்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. தற்போது முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த தேர்வு நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இன்ஜினியரிங் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வு எழுதுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close