சென்னையில் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த நபர் கைது

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 09:48 am
person-arrested-in-chennai

சென்னை பூந்தமல்லியில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை பூந்தமல்லியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கைது செய்தனர். அவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் பாஸ்போர்ட் இல்லாமல் அவர் தமிழகம் வந்து உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த நபர் குறித்து இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, கொழும்புவில் கொலை வழக்கு ஒன்றில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close