பாமக மீதான குற்றச்சாட்டு உண்மையா? என்பது மக்களுக்கு தெரியும்: பிரேமலதா

  அனிதா   | Last Modified : 01 May, 2019 01:44 pm
the-pmk-s-allegation-is-true-people-know-that-premalatha

பாமக மீதான குற்றச்சாட்டு உண்மையா என்பது மக்களுக்கு தெரியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

மே தினத்தையொட்டி தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றிவைத்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியளார்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், " உழைப்பவர்களுக்க தேமுதிக உறுதியாக நிற்கும் என தெரிவித்தார்.

4 தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் நிலையில் 3 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுப்பது சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உட்பட்டது என்றும், திமுக ஆட்சி காலத்தில் சபாநாயகர் நடுநிலையாக இருந்தார்களா எனவும் கேள்வி எழுப்பினார். 4 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று நான் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளேன். தேதிகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனகூறினார்.

மேலும் பாமக மீதான குற்றசாட்டு உண்மையா? என்பது மக்களுக்கு தெரியும் எனவும், சாதி மோதல்களை தூண்டிவிடுபவர்கள் யாராக  இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.  

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close