மே 3ல் ஃபனி புயல் கரையை கடக்கும்: வானிலை மையம்

  அனிதா   | Last Modified : 01 May, 2019 03:49 pm
fani-storm-cross-the-border-on-may-3

ஃபனி புயல் மே 3ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " ஃபனி புயல் தற்போது தீவிர புயலாக சென்னைக்கு வடக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வரும் இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 3ஆம் தேதி அன்று ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 30லிருந்து 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மீனவர்கள் வரும் 3 ஆம் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close