துரைமுருகன் அரசியலை விட்டு விலக தயாரா? ஜெயக்குமார் சவால்

  அனிதா   | Last Modified : 01 May, 2019 04:07 pm
are-you-ready-to-leave-the-duraimurugan-politics-of-the-regime-continues

அதிமுக ஆட்சி நீடித்தால் திமுக பொருளாளர் துரைமுருகன் பதவியை விட்டும், அரசியலை விட்டும் விலக தயாரா? என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். 

சென்னை ராயபுரத்தில் ஆட்டோ சங்கம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "உழைப்பாளர் தினத்தை கொண்டாடுவதை பழக்கப்படுத்திய சிந்தனை சிற்பி சிங்காரவேலரையும் அவரது  உழைப்பையும் நினைவு கூறுவதாக தெரிவித்த அவர், உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதிமுகவிற்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது என கூறிய அவர், ஆட்சிக்கு பயந்து நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றும் திமுக தான் கடந்த காலங்களில் ஆட்சியை டெல்லியில் அடகு வைத்தார்கள் என தெரிவித்தார். தற்போது மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை சட்ட பூர்வமானது என்றும் ஆதாரபூர்வமானது என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுக அரசு சட்டத்திற்கு உட்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது குறித்து பதிலளித்த அவர், டிடிவி.தினகரன் திமுகவுடன் இணைந்து துரோகமும், கூட்டு சதியும் செய்வதாக தெரிவித்தார். ஆட்சி நீடிக்காது என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், திமுக பொருளாளர் துரைமுருகன் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இந்த ஆட்சி நீடித்தால் பதவியை விட்டும் அரசியலை விட்டும் விலக தயாரா என சவால் விடுத்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close