திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 11:02 am
local-holiday-for-trichy

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு நாளை (மே.3) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதையொட்டி, நாளை திருச்சி மட்டுமில்லாது அண்டை மாவட்டங்களிலும் மக்களை வருவார்கள். 

இதையடுத்து, நாளைய தினம்  (மே.3) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக வருகிற மே 18ம் தேதி வேலை நாளாகும்.  அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close