கோமதிக்கு ரூ.10 லட்சம்; ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் - தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 01:31 pm
tn-govt-announces-rs-10-lakhs-for-gomathi-marimuthu-and-rs-5-lakhs-for-arokia-rajiv

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம், வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு. 

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற 23வது ஆசிய தடகளப் போட்டியில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். அதேபோன்று, ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 

இவர்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, ஊக்கப் பரிசுகளையும் வழங்கி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 

இந்த நிலையில், தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ. 10 லட்சம், வெள்ளி வென்ற வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்கள், இருவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார். 

முன்னதாக, கோமதிக்கு ரூ.15 லட்சமும்,ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ.10 லட்சமும் பரிசுத்தொகையை அதிமுக வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close