கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வரி, 1.13 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரியாக ஜிஎஸ்டி(GST -Goods & Service Tax) கடந்த ஜூலை 1, 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் தொகையை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் அதிகபட்சமாக கடந்த மார்ச் மாதம் 1,06,577 ரூபாய் வசூலானது.
ஆனால், தற்போது அதனையும் ஏப்ரல் மாத வரி வசூல் முந்தியுள்ளது. 2019 ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி 1.13 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து, இந்த தொகையே அதிகமாகும்.
தொடர்ந்து ஜிஎஸ்டி வரி வசூல் தொகையானது அதிகரித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
newstm.in