கும்பகோணத்தில் கந்துவட்டி பிரச்னையில் இளைஞர் அருண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பானாதுறை பகுதியில், கந்துவட்டி பிரச்னை காரணமாக கும்பல் ஒன்று அருண் என்ற இளைஞரை நேற்றிரவு வெட்டிக் கொன்றது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, செந்தில், பாலகுரு, வெங்கட் ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
newstm.in