மூன்று எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 11:15 am
dmk-files-petition-against-mlas-disqualification

டிடிவி தினகரன் ஆதரவு மூன்று எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தடை கோரி, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. 

அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் தனபாலிடம், அரசு கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் 3 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ், நேற்று விரைவு தபால் மூலம் அவர்களை சென்றடைந்தது. 

இதைத் தொடர்ந்து, மூன்று எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தடை கோரி, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால், அவருக்கு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை என்று திமுக மனுவில் கூறியுள்ளது. 

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில், வருகிற திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிமன்ற தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close