குடிபோதையில் கார் ஓட்டிய நபர்; சாலையோரத்தில் நின்ற இருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 04:19 pm
chennai-accident

சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டிய நபரால், கார் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 

சென்னை வில்லிவாக்கம் அருகே உள்ள பாடி மேம்பாலத்தின் கீழ் உள்ள டீக்கடை ஒன்றில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, அவர்கள் மீது மோதியது. உடனடியாக அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் காரில் இருந்த அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவனை போலீஸிடம் ஒப்படைத்தனர். அதேநேரத்தில், காரில் பின்பகுதியில் இருந்த இருவர் தப்பித்து விட்டனர்.

இதற்கிடையே, கார் மோதிய வேகத்தில், சரோஜா என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மோகன், ஆதிலட்சுமி ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியிலே மோகன் உயிரிழந்தார். ஆதிலட்சுமி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக, திருமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், கார் விபத்து ஏற்படுத்திய அந்த நபரின் பெயர் தேவேந்திரன் என்றும் அவர் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close