பதவி விலகத் தயாரா? - முதல்வருக்கு துரைமுருகன் சவால்!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 01:36 pm
duraimurugan-challenges-to-cm-edappadi-palanisamy

என்னுடைய இடத்தில் 12 கிலோ தங்கம், 13 கோடி ரூபாய் வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதல்வர் கூறுவதை நிரூபித்தால், நான் பதவி விலகுகிறேன்; அவ்வாறு இல்லையெனில் முதல்வர் பதவி விலகத் தயாரா? என்று திமுகவின் பொருளாளர் துரைமுருகன் சவால் விட்டுள்ளார். 

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரி, துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த மாதம் சோதனை மேற்கொண்டதில், கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் ரூ.11.53 கோடியும், துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், சூலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இது தொடர்பாக துரைமுருகனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசும்போது, "துரைமுருகன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது வீட்டில் இருந்து  12 கிலோ தங்கம், 13 கோடி ரூபாயை  வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றியதே இவ்வளவு என்றால் கைப்பற்றாதது எவ்வளவு இருக்கும்?" என்று பேசினார். 

இதையடுத்து, துரைமுருகன் முதல்வருக்கு சவால் விட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கத்தையும், 13 கோடி ரூபாயும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதல்வர் கூறுகிறார். அதனை அவர்நிரூபித்தால் நான் என் உடனடியாக பதவி விலகத் தயார். என்னுடைய பொருளாளர் பதவியையும், எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா?" என்று சவால் விட்டுள்ளார். 

மேலும், "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சராசரி மனிதன் போல ஒன்றும் தெரியாதது போல பேசுகிறார். வருமானவரித்துறையினர் எனது வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் தான் கைப்பற்றியுள்ளனர். எனவே எனது வீட்டில் ரூ.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டாதாக முதல்வர் பழனிசாமி கூறியது அப்பட்டமான பொய்" என்றும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close