ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடிய ஃபனி புயல்!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 04:56 pm
fani-cyclone-completes-its-landfall

அதி தீவிர புயலான ஃபனி புயல் ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடந்தது. தொடர்ந்து, இந்த புயல் மேற்கு வங்க மாநிலம் நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. 

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் - சந்த்பாலி பகுதிகளுக்கு இடையே ஃபனி புயல் இன்று காலை கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 175 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. அத்துடன் பல பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. 

அதிகபட்சமாக 200 கிமீ வேகத்தில் காற்று வீசியது. பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது புயலானது வட கிழக்கு திசையை நோக்கி, அதாவது மேற்கு வங்க மாநிலத்தை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, புயல் பாதிக்கும் என்று  கருதப்பட்ட பகுதிகளிலிருந்து 11.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அந்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர்சேதம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. 

இந்த புயலில் இருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அரசுத் தரப்பில் இருந்து இதுவரை உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close