இன்று முதல் 26 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்)...!

  அனிதா   | Last Modified : 04 May, 2019 09:05 am
agni-star-is-starting-today

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிபடியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல அச்சப்படும் அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னை உட்பட வட தமிழகத்தில் வெயில் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபனி புயலால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் மேகமூட்டம் காணப்பட்டாலும் புழுக்கமும், அனல் காற்றும் குறையவில்லை. இதனால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். ஃபனி புயலால் தமிழகத்தில் மழை பெய்யும் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் ஒடிசாவுக்கு சென்றதே வெயிலின் அளவு அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. நேற்று அதிகளவாக திருத்தணியில் 112 டிகிரி வெயில் பதிவானது.

இந்நிலையில் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இந்த கத்தரி வெயில் வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் இந்த காலக்கட்டத்தில் அனல் காற்று வீசுவதுடன் வழக்கத்தை விட வெப்பமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும், அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கத்தரி வெயில் தொடங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close