வணிகர் தினம்: தமிழகம் முழுவதும் நாளை கடைகளுக்கு விடுமுறை!

  Newstm Desk   | Last Modified : 04 May, 2019 06:19 pm
tn-shops-closed-tomorrow

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5ம் தேதி வணிகர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டிற்கான மாநாடு நாளை (5-ந்தேதி) காலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநிலத் தலைவரும், தேசிய முதன்மை துணைத் தலைவருமான ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார்.

அதேபோன்று, சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு தூத்துக்குடியில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக தூத்துக்குடி ‘நிலா ஸீ புட்ஸ்’ வளாகத்தில் பிரமாண்ட மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்பார்கள் என வணிகர் சங்க பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்துள்ளார். 

மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close