மூன்று மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் : முதல்வர் உறுதி

  முத்துமாரி   | Last Modified : 05 May, 2019 11:48 am
cm-edappadi-palanisamy-press-meet

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்துள்ளார். 

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக இருக்கிறது.

கட்சிக்கு எதிராக செயல்பட்ட எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? இதன் மூலம் அந்த மூன்று எம்.எல்.ஏக்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது. 

இடைத்தேர்தல் தோல்வி பயத்தினால்தான் சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என கூறும் ஸ்டாலின், எதற்கு இந்த நேரத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்? 22  இடங்களில் ஜெயித்தால் அவர்கள் ஆட்சியே அமைக்கலாமே? அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது என்பது அவர்களுக்கே தெரியும். அதனால் தான் இவ்வாறு செயல்படுகின்றனர்" என்று முதல்வர் கூறினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close