உப்பு நீரில் தாமரை மலராது என்று தமிழிசைக்கு தெரியாதா? - நடிகை குஷ்பூ கேள்வி

  Newstm Desk   | Last Modified : 05 May, 2019 05:05 pm
kushboo-replied-to-tamilisai

தூத்துக்குடி கடலில் தாமரை மலரும் என்று கூறிய தமிழிசைக்கு, உப்பு நீரில் தாமரை மலராது என்று தெரியாது போலும் என நடிகை குஷ்பூ கூறியுள்ளார். 

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்.  

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறேன். அனைத்து பகுதிகளிலும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புவதை நான் மக்களிடம் நேரில் கண்டேன். அதன்படியே வருகிற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 

தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இதில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது. தூத்துக்குடி கடலில் தாமரை மலரும் என்று தமிழிசை கூறுகிறார். உப்பு நீரில் தாமரை மலராது என்பது அவருக்கு தெரியாது போலும்" என்று எபேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close