கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் அணையில் குளித்த சுற்றுலா பயணிகள் 3 பேர் நீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சுற்றுலாவுக்காக கன்னியாகுமரி வந்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.