சூலூரில் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம்!

  அனிதா   | Last Modified : 06 May, 2019 10:43 am
mk-stalin-s-campaign-in-sulur

சூலூர், பட்டணம்புதூர் பகுதியில், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக  திமுக தலைவர் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். 

தமிழகத்தில், 4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட பட்டணம்புதூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

மேலும், திண்ணை மற்றும் மரத்தடியில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, பச்சிளம் குழந்தைக்கு பெயர் சூட்டும் படி குழந்தையின் தாய் குழந்தையை ஸ்டாலினிடம் கொடுத்தார். அந்த குழந்தைக்கு ஸ்டாலின் கண்மனி என பெயர் சூட்டினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close