ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பலி

  முத்து   | Last Modified : 06 May, 2019 03:16 pm
accident-7-persons-death

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிலி என்ற பகுதியில் இன்று பெங்களூரு - சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காரில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 4 ஆண்கள், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காரின் முன்பக்க டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close