சபாநாயகர் நோட்டீஸ்: பதிலளிக்க அவகாசம் கேட்கும் எம்எல்ஏ !

  முத்துமாரி   | Last Modified : 07 May, 2019 11:19 am
kallakurichi-prabhu-asks-time-to-reply-for-speaker-s-notice

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரி, கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு, சட்டப்பேரவை செயலரிடம் இன்று மனு அளித்துள்ளார். 

அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவர்களில் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி ஆகிய இருவரும், சபாநாயகரின் நோட்டீஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். "சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்காலத்தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரி, எம்.எல்.ஏ. பிரபு, சட்டப்பேரவை செயலரிடம் இன்று மனு அளித்துள்ளார். 

ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால், கால அவகாசம் கோரி மனு அளித்துள்ளதாக எம்.எல்.ஏ பிரபு தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close