மக்காசோளத்தில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

  அனிதா   | Last Modified : 07 May, 2019 01:27 pm
the-way-to-control-american-worm

மக்காச் சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் குறித்து வேளாண் துறை விளக்கமான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 

மக்காச் சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழு கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

மே, ஜூன் மாதங்களில் கோடை உழவு செய்தல் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.

ஒரே சமயத்தில் விதைத்தல்: அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோளப் பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு அதிக அளவில் தாக்கும்.

விதை நேர்த்தி செய்து விதைத்தல்: பேவேரியா பேசியானா 1 கிலோ விதைக்கு 10கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.

ஊடுபயிர் மற்றும் வயல் ஓரபயிர் சாகுபடி: மக்காச் சோளம் விதைக்கும் போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு, ஆமணக்கு, சூரிய காந்தி, சாமந்திப் பூ ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம் எனவே, அனைத்து விவசாயிகளும் கண்டிப்பாக ஊடுபயிர் மற்றும் வயல் ஓரப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.

முட்டைக்குவியல்கள், கூட்டமாக காணப்படும் இளம் புழுக்களை கண்காணித்து அழித்தல்: விவசாயிகள் பயிர் விதைத்த 1 வாரம் முதல் 3 அல்லது 4 தினங்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து, கண்காணித்து இலையின் மேற்புரம் அல்லது பின்றம் காணப்படும் முட்டை குவியல்கள் மற்றும் இளம்புழுக் கூட்டங்களை அழிக்க வேண்டும்.

இனகவர்ச்சிப் பொறிவைத்தல்: எக்டருக்கு 12 எண்கள் வீதம் வைத்தல்

வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்தல்: விதைத்த 7 ஆம் நாள் அசாடிராக்டின் 1சதம், வேப்ப எண்ணெய் 2மி.லி.  ஒருலிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் முட்டைகள் இடுவதை தவிர்க்கலாம்.

பூச்சிகளை கட்டுப்படுத்தும் பூஞ்சாணங்கள் தெளித்தல்: மெட்டாரைசியம் அனிசோபிலே 4 கிலோ எக்டருக்கு தெளித்தல், விதைத்த 15-20 நாட்களுக்கு மேல் தெளித்தல்.

ஓட்டுண்ணிகள் வெளியிடுதல்: முட்டை ஒட்டுண்ணி டிரைகோகிரம்மா பெர்டியோசம் 5.சி.சி எக்டருக்கு வெளியிடுதல் 
பூஞ்சாணங்கள் தாக்கிய புழுக்களை சேகரித்து அவற்றை மீண்டும் அரைத்து பயிருக்கு அடிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சாம்பல், மணல் ஆகியவற்றை குருத்தில் இடுவதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

பரிந்துரைக்கப்படும் பூச்சி கொல்லிகளை குருத்தில் தெளித்தல்: தாக்குதல் அதிகமாக இருப்பின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஸ்பின்னோசிட்12SP (Spinosad) 0.5மிலி, எமாக்டின் பென்சோயேட் 5SG (Emamechin Benzoate) 0.4கி, தயோடிகார்ப் 75WP (Thiodicarb) 2 கி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளித்தால் கட்டுப்படுத்தலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close