ரமலான் நோன்பு தொடக்கம்: பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை!

  அனிதா   | Last Modified : 07 May, 2019 12:51 pm
ramadan-fasting-start

ரமலான் நோன்பு இன்று தொடங்கியதையடுத்து, பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டுள்ளனர்.

வானில் நேற்று பிறை தெரிந்ததையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு இன்று தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவித்தார்.
இதையடுத்து, இஸ்லாமியர்கள் நேற்று இரவு திராவிஹ் தொழுகையில் தொடங்கி, இன்று அதிகாலையில் சஹர் செய்தனர். 30 நாட்கள் நோன்பு முடிந்த பின்னர், தங்களின் உறவினர்கள், நண்பர்களுடன் சிறப்பாக விருந்து படைத்து ரமலான் திருநாளை அவர்கள் கொண்டாட உள்ளனர். இந்த வருடம் ஜூன் மாதம் 4ம் தேதி (செவ்வாய்கிழமை) ரமலான் கொண்டாடப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close