முதல்வரை சந்திக்க மறுத்த ஸ்டாலின்!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2019 12:57 pm
kcr-stalin-meet

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி, மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வருகிற 13 -ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சந்திரசேகர் ராவை சந்திக்க ஸ்டாலின் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டதாகவும் இதனால் இரு தலைவர்களின் சந்திப்பு இன்று நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை, திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்றும் முதல் தலைவராக ஸ்டாலின் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழ்நிலையில் மூன்றாவது அணி அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரசேகர் ராவை சந்தித்தால், அது அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் என ஸ்டாலின் கருதுவதால், அவரை சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close