நாளை வெளியாகிறது பிளஸ் 1 ரிசல்ட்!

  அனிதா   | Last Modified : 07 May, 2019 01:19 pm
plus-1-public-exam-result-will-be-released-on-may-8

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.  

தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 6 -ஆம் தேதி தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநிலத்தில் மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ - மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவ, மாணவிகள் tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.gov.in ஆகிய இணைதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும், தங்களின் பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14 -ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தங்களது மதிப்பெண்  சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 10ஆம் தேதி பிற்பகல் மற்றும் மே11, 13 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close