தனது கட்சியை திமுகவிடம் முழுமையாக அடகு வைத்துவிட்டார் தினகரன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் ஆளும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
திமுக, அமமுக மறைமுக கூட்டணி என்று கூறாவிட்டாலும், அவர்கள் தமிழக அரசியலில் இணைந்து தான் செயல்படுகின்றனர். அவ்வாறு இணைந்து செயல்பட்டாலும், அதிமுக- பாஜக கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கிறது.
தினகரன், தனது கட்சியை திமுகவிடம் முழுமையாக அடகு வைத்துவிட்டார். ஆனால், அதிமுக- பாஜக, ஒரு கூட்டணி எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்துகொண்டிருக்கிறது" என்று பேசினார்.
newstm.in