ஈரோடு, தி.மலை, திருவள்ளூரில் மழை..! மகிழ்ச்சியில் மக்கள்..!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2019 04:56 pm
rain-at-several-districts-in-tn

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்(கத்தரி வெயில்) ஆரம்பித்துள்ளதை அடுத்து, பெரும்பாலாக அனைத்துப்பகுதிகளிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோடை வெயிலின் தாக்கத்தினால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். 

இந்நிலையில், இன்று ஈரோடு, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திம்பம், ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்ப்பேட்டை, திருவூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

அதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர், குண்ணத்தூர், களம்பூர், மலையாம்பட்டு, ராட்டினமங்கலத்தில் கனமழை பெய்து வருகிறது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலினால் அவதிப்பட்ட மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 

சென்னையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை மக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close