தமிழக அரசுக்கு கெடு விதிக்கும் ஜாக்டோ-ஜியோ!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2019 05:44 pm
jactto-geo-meeting

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வரும் 25ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும், தவறினால் 27ம் தேதி மீண்டும் சென்னையில் கூடி அடுத்த கட்ட முடிவு எடுப்போம் என்றும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது . ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், தியாகராஜன், அன்பரசு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர். 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், "ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். 3 அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், ஆகிய மூன்று கோரிக்கைகளை வரும் 25ம் தேதிக்குள் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தவறினால் 27ஆம் தேதி மீண்டும் சென்னையில் கூடி முக்கிய முடிவை எடுப்போம்" என்று தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close