பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியீடு; எஸ்.எம்.எஸ்.மூலம் மாணவர்களுக்கு தகவல் !

  டேவிட்   | Last Modified : 08 May, 2019 07:56 am
plus-one-results-will-be-released-today

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது என்றும், மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும் எனவும், அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
 
பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனவும், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பப்படும் என்றும், அதேபோல் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வை தவற விட்டவர்களுக்கும் வரும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது எனவும், விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close