திமுக - அமமுக கூட்டு வெளிப்பட்டுள்ளது: முதலமைச்சர்

  அனிதா   | Last Modified : 08 May, 2019 08:56 am
dmk-ammk-coalition-emerged-chief-minister

திமுக - அமமுக கூட்டு அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "அமமுக - திமுகவுடன் கூட்டு வைத்திருப்பது தங்கத் தமிழ்செல்வன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் வரும் ஜூன் மாதத்தில் 10 தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திறமையின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close